தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இன்று கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பு. ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை வரை மட்டும் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது, மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட […]