நான் அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருந்தபோது நான் ஆபத்தானவனாக இல்லை, ஆனால் இப்போது நான் மிகவும் ஆபத்தானவனாக இருப்பேன் என்று இம்ரான் கான் பேச்சு. பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின் இம்ரான் முதல்முறையாக பெஷாவரில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நான் நீதித்துறையிடம் கேட்கிறேன், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் முன்பாக நள்ளிரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டது ஏன்? 45 ஆண்டுகளாக இந்த தேசம் என்னை அறிந்திருக்கிறது. […]
உங்களுக்கு இந்தியாவை அவ்வளவு பிடித்திருக்கிறது என்றால், அங்கேயே நீங்களும் சென்றுவிடுங்கள் என இம்ரான்கானுக்கு மரியம் நவாஸ் அறிவுரை. நாட்டு மக்களிடையே நேற்று உரையாடிய பாக்.பிரதமர் இம்ரான்கான்,தான் நீதித்துறையை மதிப்பதாகவும், ஆனால்,உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும்,குதிரை பேரத்தில் ஈடுப்பட்டுள்ளன எதிர்கட்சிகளின் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் இம்ரான் கான் கூறினார். அதே சமயம், ஆட்சிக்கட்டிலிலிருந்து தன்னை இறக்க அமெரிக்கா துடிப்பதாகவும், சர்வதேச சாதிகளால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். அமெரிக்காவால் […]
பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். பிரதமர் இம்ரான் கான் அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த, பாகிஸ்தான் தேசிய சட்டசபையின் நடவடிக்கைகள் இன்று நடைபெற்ற நிலையில், பிரதமர் இம்ரான் கான் சட்டசபைக்கு வரவில்லை. இதனால், பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம்கான் அறிவித்திருந்தார். இதற்கிடையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என அதிபருக்கு பிரதமர் இம்ரான்கான் […]
பாகிஸ்தான்:MQM கட்சி ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.இதனையடுத்து,இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. MQM கட்சி திடீர் அறிவிப்பு: இந்நிலையில்,பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை MQM கட்சி விலக்கிக் கொண்ட நிலையில்,எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக MQM கட்சி அறிவித்துள்ளது. இதன்காரணமாக இம்ரான்கான் அரசு […]
அமெரிக்கா – சீனா இடையே உருவாகும் விரிசலும் பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியடைந்த தெற்கு ஆசியா எனும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கருத்தரங்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் பங்கேற்று உள்ளார். அதில் பேசிய பிரதமர், பனிப்போர் நோக்கி செல்லும் சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், நாடுகள் குழுக்களாக உருவாகி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாடுகள் குழுக்களாக […]
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலும், பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளன. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி, முர்ரே, கோட்லி, சட்டியன், ககுட்டா பகுதிகளை உள்ளடக்கிய அட்டாக் நாடாளுமன்ற தொகுதியில் (என்.ஏ.57) இருந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். ஆனால் இந்த முறை அவர் இஸ்லாமாபாத் தொகுதியில் (என்.ஏ.53) போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த […]