எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், 2 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சில், தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தீர்ப்பளிக்க, நீதிபதி சுந்தர், சபாநாயகரின் முடிவு செல்லாது என தீர்ப்பளித்தார். நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை தெரிவித்ததால் வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ரம்ஜான் இன்று என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை தமிழக தலைமை காஜி, பிறை தெரியாததால், சனிக்கிழமை தான் ரம்ஜான் என தெரிவித்தார். இதனால் இன்று […]