சென்னை மெரினாவில் புதியதாக கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு நிகழ்வுகள் குறித்த நேரலை நிகழ்வுகளை இதில் காணலாம்…. பிரதமர் மோடியின் தமிழக பயணத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவுடன் மேற்கொண்டு […]
பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து 65 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் எடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. […]
வேளாண் விளைபொருட்களுக்கு குறைநதபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வந்த விவசாயிகள் இன்று தங்கள் போர்ட்டத்தை மீண்டும் டெல்லி நோக்கி ஆரம்பித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது. அதிமுக கட்சி சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று விருப்ப மனுக்களை பெற உள்ளனர். இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை அடுத்தடுத்து நேரலையில் காணலாம்…
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து நாடுமுழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது. நாளை 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என பரபரப்பாக இயங்கி செயல்பட்டு வருகின்றன. இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
நேற்று மாலை மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்றும் தொடர்கிறது. மேலும் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கும் விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர். டெல்லி அலிபூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், அமலாக்கத்துறை இன்று குற்றசாட்டை பதிவு செய்கிறது. இவ்வாறு பல்வேறு தொடர் நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்….
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 3வது நாளாக இன்று கூடியுள்ளது. இன்று ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெற உள்ளது. அதே போல அதிமுக தரப்பின் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் இன்று நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்….
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். டெல்லியில் இன்று இரண்டாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலை குறிப்பில் காணலாம்…
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்றைய கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி , தமிழக அரசு கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமல் அதனை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நாளே பரபரப்பானது. இன்று இரண்டாம் நாள் மற்றும் நாளை மூன்றாம் நாளில் ஆளுநர் உரையின் கீழ் விவாதம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி பதிலுரை நிகழ உள்ளது.அதற்கடுத்து தமிழக பொது […]
நாடு முழுதுவம் பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். விளை பொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹரியானா வழியாக சுமார் 2000 டிராக்டர்கள் உடன் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி நிலவரம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ளன. தொகுதி […]
2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக ஒருநாள் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆளும் பாஜக அரசின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் கூடியுள்ளது.