இன்று கிரஹணம்.. துவங்கும் நேரம் இதோ

இன்று ஜூன் 5., ந்தேதி  சந்திர கிரஹணம் நடைபெற உள்ளது.கடந்த மாதம் 21.,ந்தேதி அபூர்வ  சூரிய கிரஹணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று ஜூலை சந்திர கிரஹணம் நடைபெற உள்ளது. இக்கிரஹகணம் ஆனது  காலை 8:38 மணிக்கு துவங்கி பகல் 11:21க்கு முடிவடைவதாக கணிக்கப்படுகிறது. மேலும் கிரஹணம் பகல் நேரத்தில் நிகழ்வதால் இதனை  நமது நாட்டில் பார்க்க முடியாது. இவை புறநிழல் கிரஹணம் என்பதால் கிரஹணத்தின் போது புவியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழுகுமாம்.இதற்கு முன்னர் … Read more

வரலாற்றில் இன்று(09.04.2020)… மக்கள் சேவையாளரான நா.மகாலிங்கம் அவர்கள் பிறந்த தினம் இன்று….

மக்கள் சேவையாளரும், அரசியல்வாதியும் , கல்வி மற்றும் விளையாட்டை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணிய மனிதரை பற்றிய தொகுப்பு குறித்து விரிவாக காண்போம்.அவர் பெயர் நா. மகாலிங்கம் என்பதாகும். பிறப்பு: இவர்,  திரு.நாச்சிமுத்து கவுண்டருக்கும் மற்றும் திருமதி.ருக்மணி அம்மையார்தம்பதிகளுக்கு  1923ஆம் ஆண்டு  ஏப்ரல்  மாதம்  09ஆம் நாள்  பிறந்தார். நா.மகாலிங்கம் அவரது தாத்தா பெயர் பழனிக்கவுண்டர்ஆவர். இவர்  பொள்ளாச்சியின் ஊர்க்கவுண்டராக விளங்கியவர். நா.மகாலிங்கம் அவரது பாட்டியின் பெயர் செல்லம்மாள் ஆகும். கல்வி: இவர் தனது பள்ளில்லல்வியை … Read more

கொரோனா விவகாரம்…. இன்று அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை…

இந்தியாவில் கொடிய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடு முழுவதும் 21 நாள்கள்  ஊரடங்கு உத்தரவு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய பிரதமர் பல்வேறு தரப்பினருடன் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.இந்நிலையில் இந்த கொடிய  கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பது  குறித்த  ஆலோசனையை பாரத பிரதமர் மோடி  எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று (ஏப்ரல்,8)நடத்துகிறார். அப்போது, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பல்வேறு அரசியல் கட்சி … Read more

இன்றைய நாள்(08.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்…. இதோ உங்களுக்காக ராசி பலன்கள்…

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.   மேஷம்:  பேச்சால் அனைவரையும் இழுத்து விடுவீர்கள்.எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைத்து மகிழ்வீர்கள்.மனதிற்கு இனிய சம்பவத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள்.பிடித்த ஒன்றிற்காக கடைசி வரை நின்று அதை சாதிப்பீர்கள் ரிஷபம்: . இறைவழிபாட்டால் இன்பங்களை வரவழைத்துக் கொள்வீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.தடைப்பட்டு வந்த காரியங்கள் தற்போது நடைபெற்று முடியும்.எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.   மிதுனம்:  சுறுசுறுப்போடு செயல்பட்டு செயல்களை முடித்து  பம்பரமாக சுழன்று  கொண்டே … Read more

வரலாற்றில் இன்று(07.04.2020)…. மக்கள் நல்வாழ்வு வாழ உதவும் உலக சுகாதார அமைப்பு தினம் இன்று…

உலக மக்கள் நல்வாழ்வு வாழ கடந்த 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் நாள், உலக சுகாதார அமைப்பு  தொடங்கப்பட்டது. இந்த  ஏப்ரல் 7ஆம் தேதியை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் இந்நாளை உலக சுகாதார தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த சுகாதார  தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடா்பாக  #HealthForAll போன்ற ஹேஷ்டேக்கையும் அறிமுகம் செய்து விழிப்புணர்வு அளித்தது அனைவருக்கும் நினைவிலிருக்கும். இது போன்று பல்வேறு முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் எடுத்துள்ளது. இந்த சுகாதார தினத்தன்று நம் உடல்நலம் … Read more

வரலாற்றில் இன்று(04.04.2020)… தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் பிறந்த தினம் இன்று…

தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்கள்  கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் என்பவருக்கும் மாடத்தி அம்மாள் தம்பதிகளுக்கு  1855-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் பிறந்தார். இவர், இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் சிறப்புடன் கற்றார். இவருக்கு  தமிழாசிரியராக இருந்து கற்பித்தவர்  நாகப்பட்டினம் நாராயணசாமி ஆவர். இந்த நாகப்பட்டினம் நாராயணசாமி அவர்களிடம் தான்  மறைமலை அடிகளார் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர்  1876-ஆம் ஆண்டு பி.ஏ. … Read more

வரலாற்றில் இன்று(01.04.2020)… ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி அவதரித்த தினம் இன்று…

ஸ்ரீராமபிரான் எதற்காக நவமி திதியில் பிறந்தார் என்ற கதை நம்மில் பலருக்கு தெரியுமா? என்றால் அது சந்தேகம்.  பொதுவாக அஷ்டமி திதி அன்றும், நவமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் ஒருநாள் மிகவும் வருத்தப்பட்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள். எங்கள் இருவரையும் ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதனால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றபடி தங்களது கஷ்டத்தை விஷ்ணு பகவானிடம் நவமி, அஷ்டமி திதிகளும் முறையிட்டுள்ளது. கஷ்டத்தோடு … Read more

வரலாற்றில் இன்று(30.03.2020)… இந்திய கவிஞர் ஆனந்த் பக்சி மறைந்த தினம் இன்று…

ஆனந்த் பக்சி அவர்கள் பாகிஸ்த்தானின் இராவல்பிண்டி நகரில் 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் நாள் பிறந்தார்.இவரது படிப்பு  பாதியிலேயே நின்றது. பின், இவர் இந்திய கடற்படையில் 2 ஆண்டுகளும் இந்திய ராணுவத்தில் 6 ஆண்டுகளும் பணியாற்றினார். இந்தியா- பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் லக்னோ வந்தார். பின் அவர், அங்கு ஒரு  டெலிபோன் ஆப்ரேட்டராக பணியாற்றினார். பின்னர் அவர் தலைநகர் டெல்லி சென்று மோட்டார் மெக்கானிக் வேலை செய்தார். இவருக்கு  சிறுவயதிலேயே கவிதை எழுதுவது … Read more

வரலாற்றில் இன்று(29.03.2020)… இந்திய பெண் எழுத்தாளர் பூபுல் செயகர் மறைந்ததினம் இன்று…

பூபுல் செயகர் என்பவர் இந்தியப் பெண் எழுத்தாளர், நூலாசிரியர் மற்றும் செயல்பாட்டாளர் ஆவார்.  இவர் செப்டெம்பர் மாதம் 11ஆம் நாள் 1915ஆம் ஆண்டு  உத்திரபிரதேச மாநிலம் இடாவா எனும் ஊரில் பிறந்தார். இவர், கிராமியக் கலைகள், கைத்தறிகள், கைவினைப் பொருள்கள் போன்றவற்றின் வளர்ச்சியில் ஆர்வத்துடன் வினையாற்றியவர். இந்தியத் தலைமை அமைச்சர்களான  நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருடன் நெருங்கிய நட்புக் கொண்டு இருந்தார். தத்துவ அறிஞர் ஜே.கிருட்டினமூர்த்தி, பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இந்திரா காந்திக்கும் இராஜீவ் … Read more

வரலாற்றில் இன்று(28.03.2020)… வேதாந்த மகரிஷி மறைந்த தினம் இன்று….

அனைவரும் அன்புசெலுத்தும் ஒருவர் என்ற ஒரு சிறந்த மனிதராக இர்ந்தவர் வேதாத்திரி மகரிஷி  அவர்கள் ஆவர். இவர், கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பன்,  முருகம்மாள் என்ற சின்னம்மாள் என்ற தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும், பக்தி கீர்த்தனைகளையும் கற்றுக் கொண்டார். இவரது குடும்பச்சூழலில் இவருக்கு படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே,  தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது … Read more