மேஷராசி அன்பர்களே! பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும் என்பதால் பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபடவேண்டாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இந்த வாரம் சில சலுகைகள் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய […]