இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் நாள் கூட்டம் காலையில் தொடங்கியது. அப்போது பல்வேறு துறை அமைச்சர்கள், உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர். அப்போது அறநிலையத்துறை குறித்து உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதாவது கோயில் காணிக்கையாக செலுத்தப்படும் நகைகள் உருக்குதல் பற்றிய விவரங்கள் கேட்டிருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : கலைஞர் பெயர் வைத்தது தான் ஒரே காரணம்.! சேகர்பாபு பரபரப்பு… அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அவர் கூறுகையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் […]
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பவர்களை கண்காணிக்க இந்து அறநிலையத்துறை கண்காணிப்பு குழுவை நியமித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா காலகட்டத்தில் 2 வருடங்களாக மட்டும் அந்த கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யும் வழக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னரும் இந்த தடை அங்குள்ள தீட்சிதர்களால் தொடர்ந்ததால், இந்த பிரச்னை உயர்நீதிமன்றம் வரை சென்றது. […]
திருக்கோயில்களில் மொட்டையடித்தால் இனி கட்டணம் இல்லை என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர்சேகர் பாபு அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதுபோன்று, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் திருமணம் நடத்த கட்டணம் இல்லை என்றும் அறிவித்துள்ளார். மேலும், இந்து அறநிலையத்துறை சார்பில் 10 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இந்துசமய அறநிலைய துறை சார்பில் ‘திருக்கோவில்’ என்ற பெயரில் ‘டிவி’ துவக்க உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் என்ற தொலைக்காட்சி துவக்க உள்ளதால் கோவில் நிகழ்ச்சிகளை ‘வீடியோ’ எடுத்து அனுப்ப கோவில் செயல் அலுவலர்களுக்கு அத்துறையின் கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து கோயில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் செயல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: அறநிலைய துறை சார்பில் சமய கொள்கைகளை மக்களிடம் […]