இந்த மொழியை கற்றுக் கொள்ளக் கூடாது என்று எப்போதும் சொன்னது கிடையாது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி. நடிகர் அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா என்ற திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் அதற்கான உரிமையை பெற்று வெளியிடுகிறது. இந்த நிலையில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தில், இந்தி திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதுகுறித்து சர்ச்சையான கருத்துக்கள் எழுந்து […]
இந்தி ஒரு நல்ல மொழி. இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். அவர்களிடம் பேச இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என நடிகை சுஹாசினி பேட்டி. மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டிய தருணம் இது என பேசி இருந்தது கடும் சர்ச்சையை எழுப்பியது. இந்த நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து இந்தி மொழி தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் திரைப்பட நடிகையும், இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் மனைவியுமான சுகாசினி […]
தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் என சு..வெங்கடேசன் எம்.பி ட்வீட். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த […]
இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, உள்துறை அமைச்சகம், இந்தியில் மட்டுமே கடிதங்களை அனுப்பி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டு இளைஞர்கள், ஆங்கிலம் நன்கு படித்து, உலகம் முழுமையும் வேலை வாய்ப்புகளைப் பெற்று முன்னேறி வருகின்றார்கள். ஆங்கிலம் படிக்காத வட இந்தியர்கள், தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருகின்றார்கள்.வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல்நாட்டு மொழி என்றால், நமக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான்.எந்தத் காலத்திலும், இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது என்று மதிமுக […]
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்விற்கு இந்தியில் மட்டும் நடத்துவது கண்டனத்திற்குரியதாக எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் 300 நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை இந்தியில் மட்டுமே நடத்தி வருவது கண்டனத்திற்குரியது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் கூறியதாவது: “பொதுத்துறை பொது […]