இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தங்கவேலுவுக்கு வீரவணக்கம் என முதல்வர் இரங்கல். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி தாழையூர் முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் (வயது 84), தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் வைத்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், சேலம் மாவட்டம் தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் […]
டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக கட்டாயமாக தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு எம்.பி சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலை கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக ஏற்று கற்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறித்து, இன்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், 130 கோடி மக்களும் தமிழை காப்பாற்ற வேண்டியது கடமை என […]
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்திய திணிக்க பார்க்கிறார்கள் என அமைச்சர் பொன்முடி பேச்சு. வேலூர் முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்த கல்லூரியில் தற்போது மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகமாக படித்து வருகின்றனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை இரு கண்கள் ஆக நினைத்து செயல்பட்டு வருகிறார். […]
மத்திய அரசை பொருத்தவரையில் இந்திக்கு தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பால் என்ற நிலையில் தான் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு. திமுக சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார். இந்தி திணிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாமும் தொடர்ந்து இந்தியை எதிர்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். மத்திய அரசை பொருத்தவரையில் இந்திக்கு தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு […]
நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் சொந்த மொழிக்கு உயிரானவர்கள் என சீமான் பேச்சு. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று சென்னை எழும்பூரில் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டமானது கொட்டும் மழையில் நடைபெற்றது. அந்த மழையிலும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அவர் நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் சொந்த மொழிக்கு உயிரானவர்கள். இந்தி மொழியை எதிர்த்து இந்த போராட்டம் […]
கோவை சம்பவத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருந்துவிட்டதாக பாஜக காண்பிக்க முயற்சி செய்கின்றது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பெட்டியில், ‘இந்தி திணிப்பு செய்யப்படுகிறது என்பது ஊரறிந்த, உலகறிந்த உண்மை; நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றிவிட்டனர். 70% மாற்றிவிட்டோம் என பெருமை பேசுகின்றனர். அதிகம் இந்தி பேசுபவர்கள் இருக்கும் மாநிலங்களில் இம்முடிவை எடுக்கலாம். மற்ற மாநிலங்களில் இந்தி திணிப்பை ஏற்கமுடியாது; இது ஐனநாயகத்திற்கு எதிரானது. இந்தியை […]
மத்திய அரசின் இந்தி திணிப்பு என்று கூறுவது வாக்கு வங்கியின் அரசியலுக்காகவே என ஜி.கே.வாசன் ட்வீட். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் […]
இந்தி மேலாதிக்கம் நம்மை ஆள்வதை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என முதல்வர் ட்வீட். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அமித்ஷா குழுவின் பரிந்துரைகள், இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். இந்திமொழி திணிப்பு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. தமிழினத்தை தமிழரை பண்பாட்டை காக்கும் போராட்டமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறோம். அனைத்து இந்திய தேர்வுகளையும் இந்தி மயமாக்க துடிக்கிறார்கள். இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் […]
நாங்கள் போராட்டம் நடத்தினால் உங்க பிழைப்பு நாறிடும் என எச்.ராஜா ட்விட். 2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில்தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானமும் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியை எதிர்த்து நாளை சட்டமன்றத்தில் தீர்மானம். வேளச்சேரி […]
தமிழ் மொழியை வளர்க்க ஹிந்தியை எதிர்த்தால் மட்டும் போதுமா? என கேள்வி எழுப்பி அண்ணாமலை அறிக்கை. மக்களைத் திசை திருப்பாமல் தமிழ் மொழியை வளர்க்க போதிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘நீதிக்கட்சி, தீராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று தமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் ஹிந்தி எதிர்க்கப்பட்டு தமிழ் காக்கப்பட்டதாக கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டது திமுக. ஆனால் உண்மை என்ன என்று இனியாவது மக்கள் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த நிலையில், மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 19ம் தேதி வரை சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில்தாக்கல் செய்யப்படும் என்றும், […]
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, திமுக சார்பில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, திமுக சார்பில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் […]
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, திமுக சார்பில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, திமுக சார்பில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் […]
இந்தி திணிப்பை கண்டித்து வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் கண்டன […]
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி […]
சகோதரர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மதரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீமான் எச்சரிக்கை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டுமெனவும், இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி என தெரிவித்திருந்தார். இது பேசும் பொருளான நிலையில், இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி என்று பதில் அளித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமானின் இந்த […]
இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர் ரகுமான் கருத்தை பாஜக வரவேற்கிறது என அண்ணாமலை பேட்டி. சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய பல்கலைகலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலைக்கான வாட் வரியை தமிழக அரசு குறைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். இதனைத்தொடர்ந்து […]
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக கேரள முதலமைச்சர் குற்றசாட்டு. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கு எதிரான வகையில் அமித் ஷாவின் கருத்து உள்ளது என குற்றசாட்டியுள்ளார். புதிய கல்வி கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மத்திய […]
பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது என ஓபிஎஸ் அறிக்கை. இந்தி மொழி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றாய் வெளியிட்டுள்ளார். அதில், இந்தி மொழி தேவையெனும் பட்சத்தில் மனமுவந்து கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்றும் அதே சமயத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறி இருக்கிறார்கள். […]
ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என முதல்வர் ட்வீட். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ள […]