தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீர்காழியில் ஒரேநாளில் 44செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. மேலும் இந்த […]
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8 ஆம் தேதி அசானி புயலாக வலுப்பெற்றது.அதன்பின்னர் வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு அருகே நிலை கொண்டிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து. அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து இன்று காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால்,வடக்கு ஆந்திரா மாவட்டங்களில் கனமழை […]
வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி,தற்போது புயலாக வலுவிழந்துள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு தென்கிழக்கே 90 கிமீ தொலைவில் அசானி புயல் நிலவுகிறது எனவும்,இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகில் காலை 11 மணிக்கு அடைந்து,பின்னர் திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் வானிலை ஆய்வு […]
வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகின்ற மே 6 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும்,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மே 6 -க்கு பிறகு மேலும் தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம்,தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர வெப்பநிலை தமிழகத்தில் தொடரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை நாளை முதல் மேலும் தீவிரம் அடையும் என்றும், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 நாட்களுக்கு பலத்த, மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோல் மராட்டியத்தின் கடலோர மாவட்டங்களிலும், தெலுங்கானா, ராயலசீமா கடலோர ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. நாளை முதல் தென் மேற்கு […]