ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வது அனைவருக்கும் தெரிந்ததே. டிக்கெட் புக் செய்ய ஒரு ஆப், புகார்களை பதிவு செய்ய இன்னொரு ஆப், ரெகுலர் டிக்கெட் எடுக்க ஒரு ஆப், ரெயில் நிலை, பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் என ரெயில்வேயுடன் சேர்த்து பல ஆப்ஸ் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய Rail Connect ஆப் உள்ளது. இது மில்லியன் கணக்கான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது. மேலும் யுடிஎஸ் (UTS), ரெயில் […]
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-ஐ தொடர்ந்து, இந்தியாவில் உருவாக்கப்படும் வந்தே மெட்ரோவை இந்திய ரயில்வே 2023 இல் அறிமுகப்படுத்துகிறது. பல வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வெற்றிகரமான ஓட்டத்திற்கு பிறகு, இந்திய ரயில்வே வந்தே மெட்ரோவை அடுத்த அண்டு 2023 டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் வைஷ்ணவ் கூறினார். இந்திய ரயில்வே, வந்தே மெட்ரோ ரயிலை […]
தண்ணீர் பாட்டில் கூடுதலாக 5 ரூபாய் வைத்து விற்றதாக கான்டிராக்டருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . சிவம் பட் என்பவர் அண்மையில் சண்டிகர்-லக்னோ ரயிலில் சண்டிகரில் இருந்து ஷாஜஹான்பூருக்கு பயணம் செய்த்துள்ளார். அப்போது அங்கு ரயில்வே காண்டிராக்டரால் விற்கப்படும் தண்ணீர் பாட்டிலானது அதில் குறிப்பிட பட்டிருந்த விலை 15ஐ விட கூடுதலாக 5 ரூபாய் வைத்து மொத்தமாக 20 ரூபாய்க்கு விற்றுவந்துள்ளார்கள். இதனை, சிவம் பட் வீடியோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் புகாராக […]
இந்திய ரயில்வே இஸ்ரோவுடன் இணைந்து நிகழ்நேர ரயில் கண்காணிப்பு (RTIS) அமைப்பை உருவாக்குகிறது. இந்திய ரயில்வே ஆனது, ரியல்-டைம் ட்ரெயின் இன்பர்மேஷன் சிஸ்டம்(RTIS) எனும் அமைப்பை இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கிக்கொண்டிருக்கிறது.முதலில் 2700 ரயில் இன்ஜின்களுக்கு RTIS சாதனங்கள், 21 மின்சார ரயில்கள் பராமரிப்பு நிலையத்தில்(லோகோ ஷெட்) பொருத்தப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) இணைந்து உருவாக்கிய இந்த RTIS சாதனங்கள், ரயில்களின் இயக்க நேரத்தை வழங்குகிறது. கன்ட்ரோல் ஆபீஸ் அப்ளிகேஷன் (COA) மூலம் […]
1999-ல் துங்கநாத் சதுர்வேதி தனது சொந்த ஊரான மதுராவில் இருந்து மொராதாபாத்திற்கு ரயிலில் செல்ல இரண்டு டிக்கெட்டுகளை வாங்கினார், ஒரு டிக்கெட்டின் விலை 70க்கு பதிலாக ரூ.90 வசூலிக்கப்பட்டு, அவருக்கு ரசீது வழங்கப்பட்டது. ஆனால் மாநில இரயில்வே அதிகாரிகள் அவருக்குப் பணத்தைத் திரும்பப்பெற மறுத்துவிட்டனர். இழப்பீடுக்காக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் அவர் விடாப்பிடியாக இருந்தார். அவருக்கு இழப்பீடு வழங்கப்படுவதற்கு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஐந்து வெவ்வேறு நீதிபதிகள் முன் […]
இந்திய ரயில்வேயை 100% சதவீதம் மின்மயமாக்கலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்தியரயில்வே துறைஅமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார். இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சியில் பங்கேற்றஅமைச்சர் பியூஷ்கோயல் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுகையில்: இந்தியா முழுவதும் உள்ள சுமார் 1,20 ஆயிரம் கி.மீ தூரம் முழுவதையும் 100 சதவீதம் அளவிற்கு மின்மயமாக்கல் முறைக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்து உள்ளார். எனவே வரும் 2030 ம் ஆண்டில் முதல் 100 சதவத பசுமை […]
கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், மால்கள், திரையரங்குகள் மட்டுமின்றி நாட்டின் எல்லைகளும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், பெரிய நகரங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் தேவையில்லாமல் ரயில் நிலையங்களுக்கு மக்கள் செல்வதை தடுக்கும் வகையில் ரயில் பிளாட்பாரம் டிக்கெட் விலையை இந்திய ரயில்வே இரண்டும் […]