நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி இன்று 5வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். மேலும் தங்கள் துறை சார்ந்த தரவுகளையும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். அதில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் முக்கிய தரவு விவரங்களை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அதில், இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு படிப்பிற்காக சென்ற மாணவர்களில் கடந்த […]
கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை. கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, கனடா முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில் உஷாராக இருக்குமாறும், தங்களது விவரங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மாணவர்கள், சீனாவில் தங்கள் கல்வியைத் தொடர சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய மாணவர்கள் சீனாவில் தங்களது படிப்பை விட்டுவிட்டு, இந்தியாவிற்கு வந்தனர். சீன பல்கலைக்கழகங்களில் சுமார் 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் பயின்று வந்த நிலையில் அவர்கள் மீண்டும் சீனாவுக்குச் சென்று தங்களது படிப்பை தொடர இயலாத சூழலில் இருந்தனர். இந்த நிலையில், கொரோனா […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 20 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையே இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு மத்தியில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்க, மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டது. இந்த நிலையில், உக்ரைனிலிருந்து […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 20 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையே இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு மத்தியில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்க, மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டது. இந்நிலையில் மீட்பு நடவடிக்கை […]
கனடாவின் டொராண்டோவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவின் டொரன்டோவில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் வேனில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்த போது,எதிரே வந்த டிராக்டரில் வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து,கனடா காவல்துறை தகவலின்படி,உயிரிழந்த மாணவர்கள் மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான் மற்றும் பவன் குமார் என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் கிரேட்டர் டொராண்டோ மற்றும் மாண்ட்ரீல் பகுதிகளில் படிக்கும் […]
கொல்கத்தாவை சேர்ந்த 24 வயது பெண் விமானி,உக்ரைன் போருக்கு மத்தியில் 800 மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களில் 20,000 ற்கும் மேற்பட்டவர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான பெண் விமானி “மஹாஸ்வேதா சக்ரவர்த்தி”உக்ரைன் ,போலந்து,ஹங்கேரி எல்லையிலிருந்து 800 மாணவர்களை மீட்டு […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும் உடன்பாடு ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டதாக ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள […]
உக்ரைனில் கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சசிகலா அவர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இந்தியாவில் தொடர்வதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் மீது ரஷியா […]
உக்ரேனில் 13-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள்ரஷ்யா கைப்பற்றி வருகிறது. ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கூறி வந்தாலும், அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உக்ரேனில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அதிகமானோர் […]
உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 11 நாட்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை உக்ரைனில் இருந்து 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். இந்த நிலையில், உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழ்நாடு மாணவர்கள் 181 பேர் […]
உக்ரைன் மீது ரஷ்யா 9 வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது.அந்த வகையில்,ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே,ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகள் வழியாக தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில்,உக்ரைன் லிவிவ் நகரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் என்பவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என மத்திய […]
அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, 4 ஏர் இந்தியா, ஒரு இண்டிகோ […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் விசா இல்லாமல் போலாந்து நாட்டிற்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. […]
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 219 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானத்தில் ருமேனியாவில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், அங்கு இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், […]