Election Commission of India: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம். மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஜூன் மாதம் 1ஆம் தேதி மாலை 6:30 மணி வரை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனுடன் சேர்ந்து ஆந்திரா, அருணாச்சல், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை […]
ADMK : அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பிரிந்தனர். இதில் இபிஎஸ் பக்கம் அதிக ஆதரவு இருந்த காரணத்தால் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என அனைத்தும் தற்போது வரையில் இபிஎஸ்க்கு ஆதரவாகவே உத்தரவு வழங்கியுள்ளனர். மேலும், நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக சின்னம், கொடி பயன்படுத்தவும் […]
Lok Sabha Election 2024 : மக்களவை தேர்தல் தேதி நெருங்கி வருகிறது. தேர்தல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என நாள்தோறும் செய்திகளில் பார்த்து வந்தோம். அதே போல தேர்தல் நடத்துவதற்கும் தீவிரமான வேலைகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து செய்து வந்தது . Read More – இந்த வருடத்தில் 5வது முறை.! பிரதமர் மோடியின் இன்றைய தமிழக பயணம்.! தேர்தல் தேதியானது எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு […]
Ponmudi case – முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பொன்முடி , கடந்த முறை திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வழக்கு பதியப்பட்டு அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. Read More – பாஜக ஆளும் மாநிலங்களில் தான் போதைப்பொருள் நடமாட்டம்… அமைச்சர் ரகுபதி விளக்கம். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், 3 […]
மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களுக்குள்ளான நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் தேர்தல் வேளைகளில் அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் முதல் மாநில உள்ளூர் கட்சிகள் வரையில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இன்னும் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது குறித்து பல்வேறுகட்ட ஆலோசனைகளை மாநில வாரியாக மேற்கொண்டு வரும் சூழலில் அவ்வப்போது போலியான தேர்தல் தேதிகள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனை அவ்வப்போது தேர்தல் […]
மத்தியில் தற்போது நடைபெற்று வரும் பாஜக ஆட்சியானது இந்த வருடம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதன் காரணமாக தேர்தல் வேலைகள் தற்போது மும்மூரமாக அனைத்து மாநிலங்களிலும் கட்சி ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என ஒரு செய்தி பரவியது. இந்த தேர்தல் தேதி குறித்து தற்போது டெல்லி தேர்தல் ஆணையம் ஒரு விளக்கத்தை அளித்து உள்ளது. பட்ஜெட்டில் இது நடந்தால் தங்கம், […]
40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 7-ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. மிசோரம் தேர்தல் முடிவு தேதியை மாற்றுமாறு பலர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து, மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவு தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 3-ஆம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்களுக்கு விசேஷமான தினம் என்பதால் தேர்தல் முடிவு […]
ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நம் நாட்டில் நடைபெறும் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அதே தேர்தலில் வேறு இடத்திலும் போட்டியிடலாம். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்து விடுவர். அதனால் அந்த பகுதிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும். பெரும்பாலும், அரசியல் முக்கிய தலைவர்கள் தங்களது தோல்வியை தவிர்க்க இரு தொகுதிகளில் […]
மகாராஷ்டிராவின் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் தேஷ்பாண்டே கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை ஆகஸ்ட் 1 முதல் மாநிலம் முழுவதும் தொடங்கும்’ என்றார். “வாக்காளர் அடையாள அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். வாக்காளர்களின் அடையாளத்தை சரிபார்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை அங்கீகரித்தல் மற்றும் ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்ததை […]
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சையால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக பிரிந்து,சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் நடைபெற்றது.ஆனால்,பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.மேலும்,அதிமுக அவைத் தலைவர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் தேர்தெடுக்கப்பட்டார். மேலும்,இதனையடுத்து,அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி காலை 9.15-க்கு கூடும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.இந்த நிலையில்,அதிமுக பொதுக்குழு மேடையிலிருந்து […]
இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில்,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஜூன் 29-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய […]
தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது.இதில் 41 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,நாடு முழுவதும் உள்ள நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 எம்பி இடங்களுக்கு நேற்று (ஜூன் 10-ஆம் தேதி) மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,உடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. கர்நாடகா: இந்நிலையில்,கர்நாடகாவில் நான்கு இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவை […]
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும். மேலும்,பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் […]
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ். இந்திய தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு சுரங்கம் ஒப்பந்தத்தை தனக்கு ஆதரவாக பயன்படுத்தியதாக புகார் வந்ததையடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டிஸில், தகுதி நீக்க நடவடிக்கையை ஏன் மேற்கொள்ள கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து ஹேமந்த் சோரன் விளக்கம் அளிக்க கோரியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் இலவசம் வழங்குவதை தடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தகவல். அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பது அக்கட்சிகளின் கொள்கை சார்ந்த முடிவுகளாகும்.மேலும்,தேர்தலுக்கு முன்போ,பின்போ இலவசங்கள் வழங்குவது என்பது கட்சிகளின் கொள்கை முடிவுகளாகும். இதனால்,இலவச திட்டங்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கொள்கைகள், முடிவுகளை தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அரசியல் […]
உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து,உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில்,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக வாக்கு எண்ணிக்கையின் போது அல்லது முடிந்த பின்பு யாரும் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது என்று […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,”ஒரு நாடு ஒரே தேர்தல்” மற்றும் “ஒரு நாடு,ஒரே வாக்காளர் பட்டியல்” குறித்து விவாதங்கள் நடக்கட்டும், அதன்மூலம் ஆரோக்கியமான கருத்துக்கள் வெளிவரட்டும்”,என்று முன்னதாக கூறியிருந்தார்.இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் எதிர்ப்பும்,சில கட்சிகள் ஆதரவும் தெரிவித்தன. இதற்கிடையில்,உ.பி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,ஒரே நாடு,ஒரே தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் […]
தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் பேரணி நேரடி பரப்புரைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் […]
2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக பேரவைத் தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமி அவர்களும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்தியலிங்கம் அவர்களும் வெற்றி பெற்றனர்.எனினும்,இருவரும் சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால்,தங்களது மாநிலங்களவை பதவியை ராஜினமா செய்தனர். இந்த நிலையில்,2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் […]
மேற்கு வங்கத்தில் உள்ள பபானிபூர், சம்சர்கஞ்ச், ஜாங்கிர்பூர் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பு. சமீபத்தில் நடந்த மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள […]