Indian Embassy : இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்தாண்டு முதல் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே போர் நடைபெற்று வருகிறது. இருதரப்பும் எல்லை பகுதிகளில் ஏவுகணை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ள நிலையில், பலர் வீடுகளை தங்களது உடமைகளை இழந்து தவிர்த்து வருகின்றனர். Read More – இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்… இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் […]
உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் ஏற்பட்டு தற்போது அது தீவிரமடைந்து வருகிறது . ஏற்கனவே ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . உக்ரைன் நாட்டு முக்கிய சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி அதனை ரஷ்யாவோடு இணைத்துவிட்டதாக அண்மையில் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். இந்த விவகாரங்களை அடுத்து, உக்ரைனில் இருக்கும் […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும் உடன்பாடு ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டதாக ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள […]
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும்,உக்ரைனின் முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதனிடையே,ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கூறி வந்தாலும்,அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதனால்,அங்கு படிக்க சென்ற வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் உக்ரைன் மக்கள்,என அனைவரும் வெளியேறி வருகின்றனர். இதனிடையே,உக்ரைனில் இருந்து அண்டை […]
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள் உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு […]
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களுக்கு உதவ முயற்சி மேற்கொண்டுள்ளோம் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் கடந்த 5 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனில் சில நகரங்களை கைப்பற்றியுள்ளது. இதற்கிடையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய […]
உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் சண்டை தீவிரமாக நடப்பதால், இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தல். உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சுற்றிவளைத்து ரஷ்யா படைகள் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தெற்கு மற்றும் […]
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எந்த முன்னறிவிப்பின்றி எல்லைகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரைனை,ரஷ்யா தொடர்ந்து தாக்கி ஆக்கிரமித்து வரும் நிலையில்,அங்குள்ள இந்தியர்களை மீட்க உக்ரைனின் அண்டை நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில்,உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எல்லைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் அண்டை நாடுகள் வழியாக மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் பணி நடைபெறும் நிலையில்,எந்தவித முன்னறிவிப்பின்றி இந்தியர்கள் எல்லைகளுக்கு செல்ல […]