சென்னை:தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள்,இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச் சான்றிதழ்கள் பெற்றததற்காக,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருக்கோயில் செயல் அலுவலர்களை பாராட்டி,தரச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 754 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இவற்றில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,ஸ்ரீரங்கம் – அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,சமயபுரம் […]