தொடரும் சைபர் தாக்குதல்.! சாம்சங்கை அடுத்து ஆப்பிள் பயனர்களுக்கு எச்சரிக்கை.!

iPhone Users

ஆப்பிள் தயாரிப்புகளில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த குழு (CERT-In), மூன்று நாட்களுக்கு முன்னதாக சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களில் சைபர் தாக்குதல்களால் ஏராளமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறியது. இதையடுத்து, பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை இந்திய அரசாங்கம் வெளியிட்டது. இப்போது, சாம்சங்கைத் தொடர்ந்து ஆப்பிள் தயாரிப்புகளிளிலும் இதே போன்ற ஏராளமான … Read more

சாம்சங் போன் பயனர்களே கவனம்.! இந்திய அரசு எச்சரிக்கை.!

samsung galaxy

சாம்சங் (Samsung Galaxy) ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, சாம்சங் பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), பழைய மற்றும் புதிய மாடல் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக்காட்டி, டிசம்பர் 13ம் தேதி பாதுகாப்பு எச்சரிக்கைக்கான அறிவிப்பை … Read more

2018 முதல் 2022 வரை, 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய இஸ்ரோ.!

கடந்த 5 வருடத்தில் 177 வெளிநாட்டு செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளதாக இந்திய அரசு தகவல். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஜனவரி 2018 முதல் நவம்பர் 2022 வரை, 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கிடையே வணிக ஒப்பந்தத்தின் கீழ் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி எம்கே3 ஏவுகணைகள் … Read more

Stop ADS:ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தை நிறுத்துங்கள்..! கூகுளுக்கு இந்திய அரசு கடிதம் !

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் விளம்பரத்தை நிறுத்தக்கோரி கூகுளிடம் கேட்டுள்ளது இந்திய அரசாங்கம். வெளிநாடு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கூகுளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடித்ததில் பந்தய நிறுவனங்களில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையாளப்படும் அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக கைவிடுமாறு இந்தியா அந்நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது. ஆன்லைன் கேமிங்கிற்கான இந்தியாவின் கட்டுப்பாடு அனைத்து நிஜ பண விளையாட்டுகளுக்கும் பொருந்தும். மேலும் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை மட்டும் ஒழுங்குபடுத்துங்கள் மற்றும் … Read more

7 விமானங்களில் இந்தியர்களை மீட்க நடவடிக்கை..!

அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.  உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, 4 ஏர் இந்தியா, ஒரு இண்டிகோ … Read more

மனிதர்கள் மீது பரிசோதிக்க அனுமதி!கிடைக்குமா? கொரோனா மருந்து

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் என்கிற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களின் மீது சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம், இந்நிறுவனமானது ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கோவேக்சின் என்கிற தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்திய வைராலஜி கழகம் ஆகியவற்றோடு இணைந்து இந்த தடுப்பு மருந்தை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளதாகவும், அந்நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்ட இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் … Read more