இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடர் நாளை வங்கதேசத்தின் சட்டோகிராமில் தொடங்குகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடக்கும் டெஸ்ட் தொடர் நாளை காலை சட்டோகிராமில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்தியா 52.08% உடன் 4-வது இடத்தில் இருக்கிறது. முதலிரண்டு […]