Rahul Gandhi: இந்த தேர்தலில் பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரமும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் வரும் தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு […]
MK Stalin: பாஜகவையும், அதிமுகவையும் புறக்கணிப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்னும் 3 தினங்களில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்வு பெறுகிறது. திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு […]
PM Modi: தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலர் குழம்பி போயிருக்கிறார்கள் என்று நெல்லை பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு. மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தந்து சென்னை உள்ளிட்ட இடங்களில் வாகன பேரணி, கூட்டத்தில் பங்கேற்று தங்களது வேட்பாளர்களுக்கு […]
Election2024: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தகவல். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 39 மற்றும் புதுச்சேரி 1 என மொத்தம் 40 தொகுதிகளில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். மக்களவை தேர்தலுக்கான […]
MK Stalin: பாஜகவை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபல ஊடகங்களுக்கு பேட்டியளித்த வருகிறார். அப்போது, திமுக அரசின் சாதனைகள், பாஜக மற்றும் அதிமுகவை விமர்சித்து குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது […]
Maharashtra: மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியானது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், 48 மக்களவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா அரசியல் […]
I.N.D.I.A Alliance : இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் என வைகோ அறிவித்துள்ளார். ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அமைக்கப்பட்டு தமிழகத்தில் பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உட்பட தேசிய அளவிலில் பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. NDA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல, காங்கிரஸ்,, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் […]
Election2024: இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும் என்று செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், விருதுகரில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, மாநிலங்களின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்காமல், சுயாட்சி வழங்க வேண்டும். குறிப்பாக நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் திணிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தற்கொலைகளில் பாஜக […]
’INDIA’ Alliance: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம். எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும்,காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கியுள்ளதும் விவாத பொருளாக மாறியுள்ளது. இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து […]
INDIA Alliance : பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடைய தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது இறுதியானது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டது. 40 மக்களவை தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பீகார் […]
DMK : மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதியுடன் ஆட்சி பொறுப்பு நிறைவடைய உள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் 543 தொகுதிகளின் ரிசல்ட் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் தமிழகம் (39) […]
Maharashtra : மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிக்குள் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மறுபக்கம் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. Read More – பாஜகவில் இணைவது குறித்த […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பாஜக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் சுமார் 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாகிய இந்தியா கூட்டணியில் தற்போது அடுத்தடுத்து பெரும் அடி விழுந்து வருகிறது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லை, அதிருப்தி, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டு வியூகங்களை வகுத்து வருகின்றன. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி பங்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிரச்சனை இருந்து வருகிறது. இதுபோன்ற சூழலில் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் யாதவ், திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவுடன் கைகோர்த்தார். இது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இதுபோன்று, இந்தியா கூட்டணியில் தான் […]
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் நாடு முழுக்க உள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியை உருவாக்கிய முக்கிய நபர்களில் ஒருவராக பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் […]
பீகார் : பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் நேற்று 9வது முறையாக பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வெற்றிக்கு பின்னர், […]
இந்தியா கூட்டணியில் உள்ள ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும், 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். அதன்படி, 2020-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியூ இணைந்து போட்டியிட்டன. பீகாரில் […]
பாரத ஒற்றுமை யாத்திரையை தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தற்போது பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை (Bharat Jodo Nyay Yatra) மணிப்பூரில் இருந்து கிழக்கு முதல் மேற்காக தொடங்கியுள்ளார் . இந்த ஒற்றுமை நியாய யாத்திரை கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கபட்டது. அசாம் மாநிலத்தில் கோலகஞ்சி, துப்ரி ஆகிய மாவட்டங்களை கடந்து தற்போது மேற்கு வங்கத்தில் யாத்திரை தொடங்கியுள்ளது. இன்னும் 25 வழக்குகள் கூட போடுங்கள்… நான் பயப்பட மாட்டேன்.! – ராகுல்காந்தி. இன்று […]
நாடாளுமனற மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போயிட்டிடும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட சுமார் 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். பீகார், பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆலோசனை […]
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் , திமுக, ஆம்ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியில் மே.வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இருந்தது. மம்தா பேனர்ஜி இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டங்களிலும் பங்குபெற்றார். தற்போது வெளியான தகவலின்படி, இன்று மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் உடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்த […]