கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்தது. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பெரும்பான்மையில்லாத பா.ஜனதாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார், எடியூரப்பாவும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு சென்றது. எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ், ஜேடிஎஸ் தங்களுடைய எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க […]