உக்ரைனுக்கு எதிரான போரில் போரிட ஒரு சில இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவலை தொடர்ந்து, இந்த போரில் இருந்து விலகி இருங்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளும் எல்லை பகுதிகள் தொடர்ந்து மோதிக்கொண்டு வருகின்றனர். மாறி […]
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என்றும் சுமார் 7,25,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி வசித்து வருவதாகவும் பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதுதொடா்பாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ‘ப்யூ’ ஆய்வு ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் 6.4 மில்லியன் (64 லட்சம்) பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இதில், இந்தியர்கள் மட்டும் 7,25,000 பேர் சட்டவிரோதமாக குடியேறி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சட்டவிரோத குடியேற்றத்தில் இந்தியர்கள் […]
கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை. கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, கனடா முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில் உஷாராக இருக்குமாறும், தங்களது விவரங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
2019 முதல் 2021 வரை 31,647 இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் இன்று தெரிவித்துள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டில் 11,347 இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் இறந்துள்ளனர். பெரும்பாலான இறப்புகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (2714), சவுதி அரேபியா (2328), குவைத் (1201), ஓமன் (913), 129 நாடுகளில் மலேசியா (592), கத்தார் (420), அமெரிக்கா […]
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து இந்தியர்களுடன் மேலும் ஒரு விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது. உக்ரைனை 7-வது நாளாக ரஷ்யா உக்கிரமாக தாக்கி வருகிறது. அந்த வகையில்,உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியில் மிகப்பெரிய அளவில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,உக்ரைனில் இருந்து வெளியேறி அதன் அண்டை நாடுகளான ருமேனியா,போலந்து,ஹங்கேரி வரும் இந்தியர்கள் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அதன்படி,60 % இந்தியர்கள் உக்ரைனை […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து மலேசியாவில் சிக்கித்தவித்த 113 தமிழகத்தை சேர்ந்த இந்தியர்கள் இந்தியா திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் தமிழக அரசின் ஏற்பாட்டின் படி ஏர் ஏசியா விமானம் மூலம் இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை வந்த அந்த 113பேர் அவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்கள் அனைவரும் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு […]