இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் குழு வருகை..!
இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்வதற்காக 20 விஞ்ஞானிகளைக்கொண்ட குழு கோவாவுக்கு வந்துள்ளது. கடல் மாசு, கடல்வாழ் உயிரினங்கள், மீன்வளம், கடற்கரைகளின் சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும். கடல் வளத்தைக் காக்கவும் எதிர்காலங்களில், கடல்களை ஆரோக்கியமான முறையில் பராமரிக்கவும் இந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். இந்தியப் பெருங்கடலுக்குள் கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதால் மிகவும் மாசடைந்துள்ள நிலையில், அதில் வசிக்கும் மீன்கள், ஆமைகள், கடற்புறாக்கள் போன்றவை பிளாஸ்டிக்குகளில் சிக்கி உயிரிழக்கின்றன.