சென்னை தண்டையார்பேட்டை உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (IOC) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாயிலர் வெடித்து ஊழியர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று பிற்பகல் 12 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பாயிலர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த ஊழியர்களும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களும் அலறியடித்து ஓடினர். அப்போது, பாயிலர் அருகே பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களான பெருமாள் மற்றும் 2 பேர் விபத்தில் சிக்கினர். பாயிலர் வெடித்ததை தொடர்ந்து, மற்ற ஊழியர்கள் அலறி […]
சர்வதேச அளவில் மிகவும் சிறந்த 16 செஸ் வீரர்கள் பங்கேற்ற செசபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில்,தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தாவும்(16 வயது) பங்கேற்றார். இதனையடுத்து,தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் காலிறுதி, அரையிறுதியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, இறுதிபோட்டியில் உலகின் நம்பர் 2 ஆன லிங் டிரனை எதிர்கொண்டார்.இப்போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லிங் டிரன் பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார்.இதனால், 2 வது இடத்தை […]
மேற்கு வங்க மாநிலம் ஹல்டியாவில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் சுத்திகரிப்பு ஆலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், 44 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நிறுவனத்தில் பணிநிறுத்தம் மற்றும் பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு யூனிட்டில் தீ விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் 37 பேர் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 7 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் […]
நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 10,000 எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் எஸ்.எம்.வைத்யா தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக, மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வண்ணம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் […]