பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சீதாபூரில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அவர்களின் மகனுடைய கார் மோதியதில் 4 பேர் மற்றும் கலவரத்தில் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.இதனால்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது. இதனைத் தொடர்ந்து,கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவசாயிகளை […]