இணைய சேவையின்றி ஸ்தம்பித்தது மூன்று மாவட்டங்கள்…!
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் வன்முறை பரவாமல் தடுப்பதற்காக 27-ம் தேதி வரை இணையதள சேவையை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான, 4 கலந்தாய்வு உதவி மையங்களிலும் […]