இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில், பொருளாதார ரீதியான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து ஆலோசிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் திமுக, மதிமுக, விசக, காங்கிரஸ்,பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றது. அதிமுகவும், பாஜகவும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தனர். திமுக, விசக, […]
மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் உறுதி அளித்துள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ மேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது தொடரான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்கப்படும் என்றும் உயர்சாதி […]
மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் நிறைவேற்றாமல் ஓய மாட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாணவர்களே கவலை வேண்டாம், பறிக்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்காமல் பாமக ஓயாது என்று அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது: காத்திருப்பு: “என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.50% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை […]
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாக மனுவில் புகார் தெரிவித்தனர். முறையான சாதிவாரியான […]
ஸ்டேட் வங்கி துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறி முறைகள் தொடர்ந்து மீறப்படுகிறது. ஸ்டேட் வங்கி துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறி முறைகள் தொடர்ந்து மீறப்படுவதாக, வெங்கடேசன் எம்.பி. அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஸ்டேட் வங்கி துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறி முறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. 2020 ல் இருந்து இந்த பிரச்சினை குறித்து […]
மத்திய அரசினால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் நுழைவுத்தேர்வுகளினால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய கிராமப்புற மாணவர்களது மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி கனவுகள் கானல் நீராகும் பேராபத்து ஏற்பட்டதாக சீமான் தெரிவித்துள்ளார். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]
மருத்துவப் படிப்பில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று முன்னதாக மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கிடையில்,மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% […]