Vikravandi : திமுக எம்எல்ஏ மறைவை அடுத்து, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வேளைகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்த சூழலில், கடந்த சனிக்கிழமை அன்று விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென உடல்நல குறைவால் காலமானார். அவர் இறப்பதற்கு முந்தைய நாள் வரையில் திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மறைவால் , அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டு […]
Ponmudi case – முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பொன்முடி , கடந்த முறை திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வழக்கு பதியப்பட்டு அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. Read More – பாஜக ஆளும் மாநிலங்களில் தான் போதைப்பொருள் நடமாட்டம்… அமைச்சர் ரகுபதி விளக்கம். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், 3 […]
ராஜஸ்தானில் கரன்பூர் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக அமைச்சரை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்தர்பால் சிங்கை, காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் குன்னார் 12,750 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். வேட்பாளர் இறந்ததால் கரன்பூர் சட்டமன்ற தொகுதியில் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனால், கரன்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், பாஜக அமைச்சர் சுரேந்திர சிங்கை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் […]
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள தபி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 7-ஆம் தேதி அன்று முடிவடைந்தது. 23 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. சுமார் 96 சதவீத வாக்குகள் பதிவானது. 15,256 வாக்காளர்களில் 96.25 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் 7,788 ஆண்களும் 7,468 பெண்களும் அடங்குவர். இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று அதாவது டிசம்பர் 3 ஆம் […]
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் வெற்றி. பிரிட்டன் இடைத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சி வேட்பாளர் படுதோல்வி அடைந்துள்ளார். இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள செஸ்டர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் வெற்றி பெற்றுள்ளார். செஸ்டர் தொகுதி ஏற்கனவே தொழிலாளர் கட்சியிடம் இருந்த தொகுதி தான். இப்போது அதைத் தக்க வைத்துள்ளனர். தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் 61% வாக்குகளை பெற்று அபார […]
மகாராஷ்டிரா இடைத்தேர்தலுக்காக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையான அணியினர் தேர்தல் சின்னமாக அரசமரம், வாள், சூரியன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். சிவசேனா ஆட்சிபுரியும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்த வேளையில், உள்கட்சி பிரச்சனை காரணமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் ஒன்றிணைந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே முதல்வராக மாறினார். தற்போது அந்தேரி கிழக்கு பகுதியில் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற […]
மக்கள் பிரச்சனைகளை நேரடியாக சென்று தீர்வு காணும் முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என்று கனிமொழி எம்.பி புகழாரம். தூத்துக்குடி,கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 9 வார்டுக்கு வரும் 29-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து கடம்பூர் காமராஜர் சிலை அருகே பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய கனிமொழி எம்.பி, வீடு தேடி மருத்துவம், காலை உணவு திட்டம் போன்ற திமுக அரசின் திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். மக்கள் பிரச்சனைகளை […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர்,20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்,40 ஊராட்சி தலைவர்கள்,436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள்,மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள்,இரண்டு நகராட்சி கவுன்சிலர்கள்,8 பேரூராட்சி கவுன்சிலர் என மொத்தம் 510 பதவியிடங்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. குறிப்பாக,ஊரக,நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்து வந்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும்,சிலர் பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியான […]
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி,சம்பாவத் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக,நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும்,சம்பாவத் சட்டப்பேரவை தொகுதியில் புஷ்கர் தோல்வி அடைந்திருந்தார்.இதனால்,அவர் பதவி விலக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து,புஷ்கர் தாமிக்காக,மாநில சட்டசபைக்கான புதிய முயற்சிக்கு வழி வகுக்கும் வகையில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கைலாஷ் கெஹ்டோரி,தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேலும், தாமிக்காக பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்தது மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உத்தரகாண்ட் […]
மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளுக்கும் , சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த அனைத்து இடங்களுக்கும் ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 24-ஆம் தேதி கடைசி நாளாகும். அதே சமயம், […]
இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதே தனது எண்ணம் என்று மம்தா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் பவானிபூர் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மம்தா பாஜகவை […]
மேற்கு வங்கத்தில் உள்ள பபானிபூர், சம்சர்கஞ்ச், ஜாங்கிர்பூர் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பு. சமீபத்தில் நடந்த மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள […]