நெல்லையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, மத்திய அரசின் பெயரை சொல்லி என்னை இடைத்தரகர்கள் மிரட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சபாநாயகர் அப்பாவு கூறியதாவது, இடைத்தரகர்கள் மூலம் குறிப்பிட்ட தொகை கேட்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. மத்திய அரசின் பெயரை சொல்லி என்னை இடைத்தரகர்கள் என்னையும் மிரட்டியுள்ளனர். என்னை தலைமறைவாக இருக்க கூறினார்கள், செல்போன் எண்ணை மாற்ற சொன்னார்கள். பாஜக ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறையின் இடைத்தரகர்கள் மிரட்டல் விடுகிறார்கள். அதுவும், அரசியவாதி, தொழிலாலதிபர்களை குறிவைத்து மிரட்டல் விடுகிறார்கள். […]
ஒப்பந்தம் செய்யப்பட்ட கரும்பை வாங்கிக் கொள்ள இடைத்தரகர்கள் மறுப்பதும்,மற்றொருபுறம் விவசாயிகளிடமிருந்து ஒரு கரும்பைக் கூட அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்யாதது ஆகியவை தான் கரும்பு உழவர்களின் கண்ணீருக்கு காரணமாகும் என்று கூறி,இவர்களின் கண்ணீரை தமிழக அரசு துடைக்குமா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பொங்கல் பரிசு வினியோகம் தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகும் நிலையில்,இதுவரை உழவர்களிடமிருந்து ஒரு கரும்பு கூட நேரடியாக கொள்முதல் செய்யப்படவில்லை.அதற்கு காரணம் அதிகார வர்க்கமும், இடைத்தரகர்களும் தீட்டி […]
கோயிலில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கோயிலில் பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர ஏற்பாடு செய்யக் கோரிய வழக்கில் இத்தகைய கருத்தை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி பேருந்து நிலையத்திலேயே இடைத்தரகர்களால் ரூ.500 வசூலிக்கப்பட்டதாக மனுதாரர் புகார் அளித்திருந்த நிலையில்,ஆண்டவர் முன் அனைவரும் சமம்.எனவே,கோவிலில் பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் […]