இந்தியாவில் கலை,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சட்டம், சமூக சேவை உள்ளிட்ட முக்கிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு மத்திய அரசானது மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி கவுரவித்து வருகிறது.அந்த வகையில்,மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா,பிடி உஷா,வீரேந்திர ஹெக்கடே மற்றும் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,மாநிலங்களவை நியமன எம்பியாக தேர்வாகியுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது […]