Annamalai: இந்தியாவிலேயே மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் தான் ஆ.ராசா என்று அண்ணாமலை விமர்சனம். கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன்பின் இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உறையற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் பிறக்காத தமிழன் தான் பிரதமர் மோடி. ஜனநாயகத்தை பற்றி திமுக […]
2G Case : காங்கிரஸ் –திமுக கூட்டணி ஆட்சியில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் திமுக எம்பி ஆ.ராசா. அப்போது திமுக மாநிலங்களவை எம்பியாக கனிமொழி இருந்திருந்தார். அந்த சமயம் மத்திய தொலைதொடர்பு துறையில் 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்தது. Read More – கரும்பு விவசாயி to மைக்.! நாம் தமிழர் கட்சியின் […]
கடந்த 31ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு சபைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது தமிழக வெள்ள நிவாரணத் தொகை விடுவிப்பது தொடர்பாக எம்பி ஆ.சாரா சரமாரியாக கேள்வி எழுப்பி பேசினார். இதனால் மக்களவையில் பாஜக – திமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. மக்களவையில் ஆ.ராசா பேசியதாவது, […]
திமுக எம்.பி ஆ.ராசா எம்.ஜி.ஆர்அவர்களை இழிவாக பேசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்.பி ஆ.ராசாவின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைத்தளமான எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்” இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் , என்றும் இன்றும் மக்கள் மனங்களில் […]
திமுகவின் சொத்து குவிப்பு பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலுக்கு பிறகு இது போன்ற செய்திகள் தொடர்ச்சியாக வரும் என அண்ணாமலை ட்வீட். திமுக எம்பி ஆ.ராசா 2004 – 2007 காலகட்டத்தில் சுற்றுசூழல் அமைச்சராக பொறுப்பில் இருந்த போது, சுற்றுசூழல் சான்று வழங்க லஞ்சம் பெற்று அதன் மூலம் வந்த பணத்தில் 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுளளது. இதில் ஆ.ராசா தனது பினாமி பெயரில் வாங்கியதாகவும், இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் […]
திமுக எம்பி ஆ.ராசாவின் பினாமி பெயரில் உள்ள 45 ஏக்கர் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. திமுக எம்பி ஆ.ராசா 2004 – 2007 காலகட்டத்தில் சுற்றுசூழல் அமைச்சராக பொறுப்பில் இருந்த போது, சுற்றுசூழல் சான்று வழங்க லஞ்சம் பெற்று அதன் மூலம் வந்த பணத்தில் 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுளளது. இதில் ஆ.ராசா தனது பினாமி பெயரில் வாங்கியதாகவும், இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் எனவும், இந்த சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை […]
கோவை விமான நிலையம் அருகே திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி பாஜக மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திமுக எம்.பி ஆ.ராசா சில வாரங்களுக்கு முன்னர் மனுஸ்மிருதி பற்றி தனது கருத்துக்களை ஒரு விழாவில் பேசியிருந்தார். இந்த கருத்துக்கு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக சில ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் நீலகிரி எம்பி ஆ.ராசா, இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். ஆ.ராசாவை […]
மனு தர்மம் பற்றி பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெண்கள் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சில தினங்களுக்கு முன்னர், திமுக எம்.பி ஆ.ராசா, மனு ஸ்மிருதி பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இந்த கருத்துக்கள் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும். ஆ.ராசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆ.ராசா பேசிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, திராவிடம் விடுதலை கழக பெண்கள் […]
விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை அவமதித்திருப்பது கோழைத்தனமான செயல் என சசிகலா ட்வீட். விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, கரும்புள்ளிகளுடன் ஆ.ராசாவின் படத்தை தொங்கவிட்டுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெரியார் சிலையில் போர்த்தப்பட்டிருந்த துணையையும், ஆ.ராசா புகைப்படத்தையும் அகற்றி விட்டு, இது தொடர்பாக விசாரணை பெற்றுக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து சசிகலா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், […]
விழுப்புரத்தில், ஆ.ராசா பற்றிய கேள்விக்கு மதுரை ஆதீனம் பதில் அளிக்க மறுத்து, என்னை வம்பில் மாட்டிவிட பாக்குறீங்களா என அங்கிருந்து சென்றுவிட்டார். சில தினங்களுக்கு முன்னர், திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்கள் பற்றியும், மனு ஸ்மிருதி மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சில கருத்துக்களை கூறினார். ஆ.ராசா கூறிய கருத்துக்களுக்கு, இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் மத்தியில் கடும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. கோவையில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு எல்லாம் […]
ஆ.ராசா எடுத்துச் சொன்னால் மட்டும் எதிர்ப்பு எழுவது ஏன்? சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் எழும் அதே சனாதன வெறிதானே? என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். இவரது பேச்சு சர்ச்சையான நிலையில், இவரது கருத்தை பாஜகவினர் ஒருபக்கம் விமர்சித்து வருகின்றனர். மறுபக்கம் அவருக்கு ஆதரவாகவும் அரசியல் தலைவர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த […]
திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்கள் குறித்து பேசியதற்கும், கோவையில், போராடிய பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வரும் 26ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக எம்பி ஆ.ராசா, சில தினங்களுக்கு முன்னர் ஓர் அரசியல் கூட்டத்தில் பேசுகையில், மனு ஸ்மிருதி பற்றி பேசியிருந்தார். அப்போது, நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாது இருந்தால் கண்டிப்பாக இந்துவாக தான் இருக்க வேண்டும். இந்துவாக நீ […]
ராகுல் ஆ.ராசா இந்துக்கள் அனைவரும் விபச்சாரி மகன் என்று சொல்லியும் மௌனம் காப்பது ஏன்? என எச்.ராஜா ட்வீட். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், ஆ.ராசாவை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளதா பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த நிலையில், பாஜக […]
ஆ.ராசா மனுநூலில் கூறியருப்பதைத் தான் எடுத்துரைத்துள்ளார் என திருமாவளவன் பேட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், ஆ.ராசா மனுநூலில் கூறியருப்பதைத் தான் எடுத்துரைத்துள்ளார். சூத்திரர் எனப்படும் […]
திமுக எம்.பி ஆ.ராசா, அண்மையில் ஒரு மேடையில், நான் இந்துக்களை தவறாக பேசினேன் என என் மீது வழக்கு போட்டால், நான், பகவத் கீதை, மனு ஸ்மிருதி ஆகியவற்றை படித்து காட்டுவேன் என ஆவேசமாக பேசியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, ‘ நீ கிருஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாது இருந்தால், பௌத்தனாக இல்லாது இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும். அப்படி […]
மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியவரை கைது செய்யாமல், இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? என அண்ணாமலை ட்வீட். திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதால் கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். கைதை தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் அவர்கள், தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் […]
மன்னிப்பு கேட்க நான் தயார். எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை கூறுங்கள். நான் 2 ஜியையே பார்த்தவன். இந்த விளையாட்டெல்லாம் என்னிடம் கூடாது. – திமுக எம்.பி ஆ.ராசா அண்மையில் நடைபெற்ற திமுக விழாவில் ஆவேசமாக பேசினார். திமுக சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா பேசுகையில், ‘ நீ கிருஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாது இருந்தால், பௌத்தனாக இல்லாது இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும். இந்துவாக […]
திரு.ஆ.ராசா.அவர்கள் குறித்து அநாகரீகமாகவும் அவதூறு பரப்பும் வகையிலும் தொடர்ந்து “காவி சங்கி” கும்பல்கள் பேசி வருவது ஏற்புடையதல்ல கடுமையான கண்டனத்திற்குரியது என வேல்முருகன் ட்வீட். ஆ.ராசா எம்.பி சமீபத்தில், நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்துக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது அது சர்ச்சையாகி உள்ளது. இந்த நிலையில், ஆ.ராசா-வுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘திமுக வின் துணைப் பொதுச் […]
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை என டிடிவி தினகரன் ட்வீட். ஆ.ராசா எம்.பி சமீபத்தில், நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்துக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது அது சர்ச்சையாகி உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக […]
90 சதவீதம் இந்துகளின் உரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும். திமுக எம்.பி ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் திமுக சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா சூத்திரர்கள், இந்துக்கள் பற்றி கருத்துக்களை பேசி இருந்தார். இந்த விடியோவை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பகிர்ந்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் மிக பெரிய பேசுபொருளாக மாறியது. இந்துக்கள் பற்றி தவறாக பேசுகிறார் என கூட்டணி கட்சியினரே விமர்சிக்கும் வண்ணம் […]