இந்தியாவுக்கான இலங்கை தூதராக தற்போது சித்ராங்கனே வாகிஸ்வரா பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், புதிய தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோவை நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். எனினும், உயர் பதவி நியமனங்களுக்கான பாராளுமன்ற கமிட்டி ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர் அவர் பொறுப்பேற்பார். மைத்ரிபால சிறீசேனாவிடம் செயலாளராக பணியாற்றிய ஆஸ்டின் பெர்னாண்டோ சமீபத்தில் தனது பதவியை ராஜீனாமா செய்திருந்தார். மேலும், அதிபரின் ஆலோசகராகவும் கிழக்கு மாணத்தின் கவர்னராகவும் ஆஸ்டின் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.