ஆவின் பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது கண்டனத்தை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்படும் ஆவின் இனிப்பு பொருட்களின் விலை அண்மையில் கணிசமாக விலை உயர்த்தப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்ப்பை தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, ‘ ஆவின் நிறுவனத்தால் […]