சென்னையில் புயல் காரணமாக பெய்த மழையால், மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் மழை நீர் வடியாத காரணத்தால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தங்களது அத்தியாவசிய தேவையை கூட பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அன்றாட தேவையான பாலை வாங்குவதற்கு மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் வாங்குகின்றனர். பல இடங்களில் பாலை அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அன்புமணி ராமதாஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத மழை பெய்ததால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில், ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. […]
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான மிக்ஜாம் புயல் நேற்று சென்னை அருகே வந்தது. இதன் காரணமாக நேற்று சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் எல்லா இடங்களிலும் நீர் தேங்கியது. எல்லா பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் இன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில்,பால்வளத்துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பால் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சமடைய தேவையில்லை என தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை காலை முதல் […]
தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தின் பாலில் கொழுப்பு அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டினார். மேலும், இதுகுறித்த ஆய்வறிக்கை என்றும் ஒரு பதிவை ததனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து ஆவின் பால் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இது குறித்து பதில் அளித்து இருந்தார். ஆவின் பால் பாக்கெட்டில் […]
ஆவின் பால் விலை தொடர்ந்து நெய் விலை தற்போது வெண்ணெய் விலை உயர்வு. ஆவின் பால் விலை தொடர்ந்து நெய் விலை தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அந்த வகையில், 500 கிராம் குக்கிங் வெண்ணெய் விலை, ரூ.255-லிருந்து ரூ.265-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 100 கிராம் குக்கிங் வெண்ணெய் விலை ரூ.52 லிருந்து, ரூ.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பொருட்களின் விலை தொடர்ந்து […]
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிந்தனையில் மாற்றம், சமூகத்தில் ஏற்றம் என ஆவின் பால் பாக்கெட்களில் அச்சிடப்பட்டுள்ளது. இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஆவின் பால் பாக்கெட் இன்று வித்தியாசமான முறையில் அச்சிடப்பட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிந்தனையில் மாற்றம், சமூகத்தில் ஏற்றம் என ஆவின் பால் பாக்கெட்களில் அச்சிடப்பட்டுள்ளது.
ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிப்பு. ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஆவின் பால் கடந்த ஆண்டு, நாள் ஒன்றுக்கு 26 லட்சம் லிட்டர் விற்பனையான நிலையில் தற்போது 3 லட்சம் லிட்டர் அதிகரித்து 29 லட்சம் லிட்டர் விற்பனை நடைபெறுகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆரஞ்சு நிற பால் விலை அதிகரித்தது. ஆரஞ்ச் பால் […]
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது! ஆனால், இது யானைப்பசிக்கு சோளப்பொரி என மநீம அறிக்கை. ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த விலை உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் போன்ற அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து மநீம ஆவின் பால் கொள்முதல் விலை […]
ஆவின் பால் கார்டு வைத்திருக்கும் பொது மக்களுக்கு ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் அதே 48 ரூபாய் தான் எனவும், வியாபார நோக்கத்திற்காக வாங்குபவர்களுக்கு மட்டுமே பால் லிட்டருக்கு 60 ருபாய் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த விலையேற்றம் குறித்து தமிழக […]
ஆவின் பால் பாக்கெட்டில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஆவின் பால் பாக்கெட்டில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி இனிப்புகள் குறித்து பொதுமக்கள் அறிந்துக்கொள்ள ஏதுவாக, தீபாவளி சிறப்பு இனிப்பு மற்றும் காரவகைகள் என அதற்கான பட்டியலும் ஆவின் பால் பாக்கெட்டில் இடம் பெற்றுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னமான செஸ் தம்பி புகைப்படம் பொறிக்கப்பட்டு உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த […]
வெண்மை புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் பிறந்த குரியன், குஜராத் மாநிலம் ஆனந்தில் அரசு பால்பண்ணையை மேம்படுத்துவதில் வெற்றிகரமாக செயல்பட்டவர். இந்தியாவை உலகிலேயே மிகப் பெரிய பால் உற்பத்தி நாடாக உயர்த்தியவர் வர்கீஸ் குரியன். இந்நிலையில், வெண்மைப் புரட்சியின் தந்தை” டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, வெண்மை புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன் பிறந்த […]
சென்னை:ஆவின் பால் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் உறுதியளித்துள்ளார். சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள் கடைகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டு,மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மூன்றாவது நாளாக இன்று வழங்கினார்.அதேசமயம், அமைச்சர்களும்,அதிகாரிகளும் நிவாரணப்பணிகள் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,இன்று காலை சோழிங்கநல்லூர்,அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பால்பண்ணை ஆய்வு செய்த […]
பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை. இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசானது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி, பொது மக்களின் நலன் கருதி தமிழக அரசு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்ததினால் ஆவின் பால் விற்பனை […]