தமிழ்நாட்டில் நூதன முறையில் பல பண மோசடிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இது போன்ற சம்பவம் ஒன்று சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் அம்பத்தூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் பேஸ்புக் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் ஒன்றை பார்த்திருக்கிறார். சென்னை வந்தடைந்த வெற்றி துரைசாமி உடல்..! அப்போது அந்த விளம்பரத்தை பார்த்து மறுமுனையில் இருப்பவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்படி பேசுகையில் […]
சென்னையில் தனியார் செயலி மூலம் வாடகைக்கு காரை எடுத்து அதனை திருடி, திருநெல்வேலியில் விற்று வந்த கும்பலை தனிப்படை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். சென்னை ஆவடியை சேர்ந்த கிருத்திகா என்பவர், தனியார் செயலி மூலம் தனது காரை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்துள்ளார். அந்த தனியார் செயலி மூலம் புவனன் குப்தா எனும் பெயரில் கடந்த 8ஆம் தேதி ஒருவர் காரை புக் செய்து, 10ஆம் தேதி ஓட்டுநர் உரிமம் கொடுத்து காரை ஒருநாள் […]
சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயிற்சி மையத்தில் பயிற்சியின்போது சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்ட துப்பாக்கி குண்டு அருகில் உள்ள வீட்டில் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கான பயிற்சி மையம் உள்ளது.நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்த நிலையில்,பயிற்சி தளத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டிருந்த போது,வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு அருகில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையை நள்ளிரவு […]
இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.மேலும்,ஏதேனும் அவசர காரணம் எனில் முறையான அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தது. இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்: தேவையின்றி செல்போனில் அரட்டை- எச்சரிக்கை: “அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை அடிப்பதும், அதனை பயன்படுத்துவதும்,வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு உரிய […]
ஆவடி பகுதியில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய போது, சிறுவனிடம் உரையாடிய முதல்வர். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மழை பெய்ய தொடங்கிய நாளில் இருந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு […]
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் செய்த செயல்.அதிர்ச்சியில் உறைந்த மாணவிகளின் பெற்றோர்.விரைந்து செயல்பட்ட காவல்துறையினர். மாணவிகளிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. சென்னை ஆவடியில் உள்ள காமராஜ் பெண்கள் மேல்நிலைபள்ளியை சேர்ந்தவர்கள் பத்தாம் வகுப்பு 4 மாணவிகள் ஆவர்.இந்நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் மாணவிகள் வீட்டிற்கு வராததால் அவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் செய்வதறியாது […]