கிரீஸின் இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி நகர ஆளுநரை பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக அடித்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். 75 வயதான யானில் போட்டரிஸ் தசலோனிகி நகர ஆளுநராக இருக்கிறார். தேசியவாத எதிர்ப்பு பார்வைக்காக இவர் அறியப்படுகிறார். ஒன்றாம் உலக போரில் துருக்கியர்களால் கொல்லப்பட்ட கிரேக்க இனத்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் தசலோனிகி வந்தார். இவரை அங்கு கூடியிருந்த தேசியவாதிகள் சிலர் அவரை தலையிலும், […]