போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து புகார் அளித்த அண்ணாமலை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் சென்னை கிண்டியுள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆ.என்.ரவியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் மீது அண்ணாமலை புகார் அளித்துள்ளார். மேலும் அவர் உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் ஆளுநரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.