சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் (எம்ஜிஆர் மாளிகை) இன்று அதிமுக கட்சியை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டணி பற்றி கவலை வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி..! இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பற்றி […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக கட்சியை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடன் முக்கிய ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது மக்களவைத் தேர்தல் தொடர்பான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்த இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் ” மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் கூட்டணி முடிவானதும், அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யலாம். […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னையில் தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்குவர் என்றும் தகவல் கூறப்படுகிறது.
தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அருகருகே அமர்ந்துள்ளனர். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இக்கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் முதல் ஆளாக கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் […]
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்த நிலையில், டெல்லியில் ஆலோசனை கூட்டம். குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி தற்போது ஆலோசனை கூட்டம் தொடங்கி […]
இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இன்று மாலை 5 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டமானது ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலை தேர்வு செய்வதற்காக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், சி.பி.சி.ஐ.டி. டிஜிபி ஷகில் அக்தர், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். விக்னேஷ் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 9 போலீசாரிடம் நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில், மீண்டும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், பிரஷாந்த் கிஷோர், அம்பிகா சோனி, திக்விஜய சிங், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அஜய் மக்கன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், 2024 பொதுத் தேர்தல், குஜராத் மாநிலத்திற்கான சட்டமன்ற […]
டெல்லி சோனியா காந்தி இல்லத்தில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் பேசப்பட்டதாகவும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினை […]
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் […]
தூத்துக்குடியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிலையில், 21 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கீழ்கண்ட […]
நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், […]
கொரோனா தொற்று பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் அமலாக உள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கான […]
பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், டெல்லியில் பாஜக எம்.பி-க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கோட்டம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், டெல்லியில் பாஜக எம்.பி-க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் சென்னையில் உள்ள பிலிம்சேம்பரில் அக்டோபர் 8-ஆம் தேதியன்று தமிழ் சினிமா துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் சென்னையில் உள்ள பிலிம்சேம்பரில் அக்டோபர் 8-ஆம் தேதியன்று தமிழ் சினிமா துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்த் திரையுலகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ் துறையினர், ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்கள் […]
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று ஆலோசனை. தமிழக அரசின் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் நடத்தப்படாமல் உள்ளது. கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. எனவே காலிப் பணியிடங்களுக்கான தேர்வை நடத்த அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பாக […]