முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் நாளை(28-ஆம் தேதி) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.அன்று சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதன் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை […]
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களிலும்,வேறு சில மாவட்டங்களிலும் பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க,விடியா திமுக அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில்,தாலுக்கா அலுவலகங்கள் முன்பு நாளை மறுநாள் விவசாயப் பெருங்குடி மக்களோடு இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவிப்பு. தமிழகத்தில் பெருமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயப் பெருங்குடி மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்காத விடியா திமுக அரசைக் கண்டித்தும்;விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு,அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க […]
திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கடந்த டிச.1 ஆம் தேதி அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் திமுக அரசைக் கண்டித்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன்படி, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து, ஆட்சிப் பொறுப்புக்கு […]
உத்தரப்பிரதேச மாநில வன்முறையை கண்டித்து,நாடு முழுவதும் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி என்ற இடத்தில், அம்மாநில துணை முதல்வர் அரசு விழாவில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்,அவருக்கு கருப்புக்கொடி காட்ட விவசாயிகள் முயன்றனர். அப்போது, விவசாயிகள் […]
தமிழ் கடவுள் முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக விமர்சித்தவர்களை கண்டித்து வீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்என்று தமிழக பா.ஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுள்களையும் தரக்குறைவாக விமர்சித்து, சுரேந்திர நடராஜன் என்பவர் கருப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். இவரது பின்னணியில், சமூக விரோத, தேச விரோத, ஹிந்து விரோத, அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன என்ற எண்ணம் அமைதியை விரும்பும் தமிழக […]