சென்னை:ஆவணங்களை புதுப்பிக்காத வாகனங்கள் மீது ஆர்டிஓக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சரக ஆர்டிஓக்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகுதிச் சான்று, காப்புரிமைச் சான்று, புகைச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக,தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு […]