திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி உட்கொண்ட 10 வயது சிறுமி இறந்துள்ளார், மேலும் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள 7 நட்சத்திர ஹோட்டலில் உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த ஹோட்டலில் […]