Delhi: டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2021-2022 காலகட்டத்தில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கை திட்டம் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்று இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வழக்கு பதவி செய்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதேசமயம். இந்த வழக்கில் சட்ட விரோத […]
Jagadeep Dhankhar : இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை காவலில் உள்ளார். மாநில முதல்வர் கைது பற்றி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தது. அதுபற்றி கருத்துக்கள் கூறியிருந்தது. மேலும், இதில் இந்திய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் […]
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-2022 ஆண்டு காலத்தில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கை திட்டத்தின் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த வழக்கில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி டெல்லி மாநில முன்னாள் அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் […]
Arvind Kejriwal : அரவிந்த் கெஜிரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என என்ற மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்ர்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கடந்த வாரம் கைது செய்து விசரணை காவலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இன்று அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டாலும், இன்னும் டெல்லி முதல்வராக […]
Arvind Kejriwal : நம் முன்னே பெரிய சக்தி ஒன்று இருக்கிறது, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு சிறையில் இருந்தபடி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். புதிய மதுபான கொள்கை வழக்கில் நேற்று முன்தினம் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ள […]
Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து, அவரது இல்லம் சுற்றி 144 தடை பிறப்பித்து, தலைநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்று இரவு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவலை அமலாக்கத்துறை கைது செய்தது. Read More – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை தேர்தல் நெருங்கும் […]
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமின் வழங்கப்பட்டது. READ MORE – மதுபான கொள்கை வழக்கு.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…! டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் எம்.பி சஞ்சய் சிங் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவின் என்டிஏ கூட்டணி கட்சிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதில், வரும் தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒன்றை குறிக்கோளுடன் இந்தியா கூட்டணி கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த கூட்டணியில் சில கட்சிகள் வெளியேறினாலும், தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி […]
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் ஒரு சில நாட்களில் கைது செய்யப்படலாம் என்று அம்மாநில அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவுமான சவுரப் பரத்வாஜ் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி உட்பட சில மாநிலங்களில் ஆம் ஆத்மி – […]
டெல்லி அரசியலில் திடீர் திருப்பமாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக குதிரை பேரம் நடத்துவதாகவும், அரசை கவிழ்க்க முயற்சிப்பதாகவும் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டி வந்தார். இதனால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்களுடன் தான் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய சூழல் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருவதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். இதன் மூலம் அரவிந்த் […]
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும், டெல்லியில் தனது ஆட்சியை கலைக்க பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்தார். இந்த சூழல், டெல்லி சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார். டெல்லியில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ளன, பாஜக 8 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. […]
டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 எம்எல்ஏக்கள் இருக்கும் பட்சத்திலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதன்படி, டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை […]
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பாஜகவை எதிர்த்து களமிறங்கினர். இதில், சண்டிகரில் மொத்தமுள்ள 36 வாக்குகளில், 16 ஓட்டுகள் பெற்று பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனால், மேயர் தேர்தலில் பாஜக […]
டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். கடந்த முறை 2020ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி உள்ளது. பாஜக 8 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. பெரும்பான்மைக்கு 36 எம்எல்ஏக்களை பெற்று இருக்க வேண்டும். இந்நிலையில் முன்னதாக, ஆளும் ஆம் ஆத்மி அரசு டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் செய்ததாகவும், அதன் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஆம் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் ஒருபக்கம் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குறுதி என தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், பாஜகவுக்கு எதிராக உருவாகியுள்ள இந்தியா கூட்டணியில் சீட் பகிர்வு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதன்படி, இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி […]
நாடாளுமனற மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போயிட்டிடும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட சுமார் 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். பீகார், பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆலோசனை […]
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு தலைநகராக விளங்கும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் மேயர் தேர்தல் இன்று நடைபெற இருந்தது. ஆனால், தேர்தல் அதிகாரி அனில் மசி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனை சென்றதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான மறு தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. பில்கிஸ் பானு வழக்கு…கூடுதல் அவகாசம் கோரி மனு..! சண்டிகரில் உள்ள மொத்தம் என் 35 மாநகராட்சி இடங்களில் பாஜக 14 கவுன்சிலர்களை கொண்டுள்ளது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து முறையை […]
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் , தனது கட்சி தொண்டர்களுடன் அண்மையில் உரையாற்றினார். அப்போது மக்கள் நலனுக்காக நாங்கள் தேர்ந்தெடுக்க பாதையில் பயணித்து வருகிறோம் . அதன் காரணமாக கட்சியில் இருக்கும் தொண்டர்கள் சிறைக்கு செல்லவும் தயராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு பேசினார் . மேலும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அரசியல் தலைவர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளுக்கு நல்ல கல்வி […]
டெல்லி அரசு உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்கவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளளது. அதாவது, டெல்லியை ஹரியானா , ராஜஸ்தான் மாநிலத்துடன் இணைக்கும், பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பின் (ஆர்ஆர்டிஎஸ்) சாலை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. டெல்லியை மீரட்டுடன் இணைக்கும் 82.15 கிமீ நீள பாதைக்கு ரூ.31,632 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இதன் மூலம் டெல்லி – மீரட் தொலைவை 60 நிமிடங்களில் கடக்க முடியும் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் […]
ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். – டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா. டெல்லியில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் 15ஆண்டு கால உள்ளாட்சி அதிகாரத்தை டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கைபற்றியது. இதனை அடுத்து, டெல்லி துணை முதல்வர் மனோஜ் சிசோடியா தனது டிவிட்டர் பக்கத்தில், ஆம் ஆத்மி கவுன்சிலர்களை விலைபேச பாஜக ஆரம்பித்து விட்டது. அப்படி யாரேனும் தொடர்புகொண்டால் பதிவு செய்து வையுங்கள் என […]