Tips for find out the Original Phones : நாம் விரும்பி வாங்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் நீண்ட நாட்கள் உபயோகிக்க வேண்டும் என்பதை கருத்தில் வைத்து கொண்டே நாம் போன் வாங்குவோம். அப்படி வாங்கும் ஐ ஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் எல்லாம் உண்மையாகவே புதிய போன் தானா என்று நாம் இந்த பதிப்பில் பார்ப்போம். ஐ ஃபோன் ஷோரூம் அல்லது சாதாரண மொபைல் கடைகளில் குறைந்த விலைக்கு ஐபோன் கிடைக்கும் என்று விற்று […]
Apple Warns : தண்ணீரில் விழுந்த ஆப்பிள் ஐபோனை அரிசியில் வைக்கும் பழக்கத்தை தவிர்க்குமாறு தங்களது பயனர்களுக்கு அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக நாம் மொபைல் தண்ணீரில் விழுந்தாலும், மழையில் நனைந்தாலும், உடனே பேட்டரியை கழட்டிவிட்டு நம் வீட்டில் உள்ள அரிசி பானை அல்லது அரிசி பையில் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி செய்யும்பட்சத்தில் செல்போனில் புகுந்துள்ள தண்ணீர் காயக்கூடும் அல்லது குறையும் என நம்பப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் அரிசி அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் […]
ஒவ்வொரு முறையும் ஆப்பிள் நிறுவனம் தனது ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தும்போது, அது சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறும். அப்படி ஒரு பொருளை பற்றி தான் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதாவது, சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட, விஷன் ப்ரோ ஹெட்செட் + கண்ணாடி (Apple Vision Pro) தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்து உள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக பெரிதாக புதிய படைப்புக்களை வெளியிடாத நிலையில், தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய டெக்னாலஜிதான் இது. […]
ஆப்பிள் தயாரிப்புகளில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த குழு (CERT-In), மூன்று நாட்களுக்கு முன்னதாக சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களில் சைபர் தாக்குதல்களால் ஏராளமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறியது. இதையடுத்து, பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை இந்திய அரசாங்கம் வெளியிட்டது. இப்போது, சாம்சங்கைத் தொடர்ந்து ஆப்பிள் தயாரிப்புகளிளிலும் இதே போன்ற ஏராளமான […]
கடந்த 2022ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள் மற்றும் மேக் போன்றவற்றை பயனர்களே சரி செய்து கொள்ளும் ‘செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் எஸ்இ போன்ற மாடல்களுக்கு மட்டுமே இந்த திட்டம் இருந்தது. பிறகு ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்கள் வரை விரிவுபடுத்தியது. இப்போது, செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் திட்டத்தை 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ, 15 இன்ச் […]
கடந்த சில நாட்களாக உலகளவில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் அதன் ஐபோன்களின் உற்பத்தி மீது கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இந்த ஐபோன்களைத் தயாரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் நோக்கிலும் ஐபோன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆப்ஸ் உங்க மொபைலில் […]
கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி அன்று நடந்த போர்டு மீட்டிங்கில் பேச்சு வார்த்தையின் போது, இந்தியாவில் இருக்கும் சீனாவின் தைவானைச் சேர்ந்த வின்ஸ்ட்ரான் இன்ஃபோகாம் என்ற ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் கையகப்படுத்தியது. இந்த ஆலையை 125 மில்லியன் டாலர்களுக்கு டாடா குழுமம் வாங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெற்றது. இதை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தி, டாடா குழுமம் அடுத்த […]
கடவுளுக்கு வைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 6 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின், கயாவில் உள்ள ஒரு பள்ளியில் துர்கா தேவிக்கு வைக்கப்பட்ட பிரசாதத்தில் இருந்து ஆப்பிள் பழத்தை எடுத்து சாப்பிட்டதற்காக 6 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த விசாரணையில், பள்ளியின் உரிமையாளர்கள் அந்த 6 வயது சிறுவனை ஒரு அறைக்குள் வைத்து கொடூரமாக தாக்கியதாகவும், பின்னர் அந்த சிறுவன் பள்ளி வளாகத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டதாகவும் […]
ஐபோன் 12 மற்றும்13 மாடல்களுடன் பெட்டியில் சார்ஜரைச் சேர்க்காததற்காததால், வாடிக்கையாளர்களுக்கு முழுமையடையாத தயாரிப்புகளை வழங்கப்பட்டதாகக் கூறி, ஆப்பிள் பிஆர்எல் நிறுவனத்திற்கு பிரேசில் அரசாங்கம் 12.275 மில்லியன் (சுமார் ரூ. 18 கோடி) அபராதம் விதித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக, 2020 ஆம் ஆண்டில் ஐபோன் 12 மாடல் அறிமுகத்துடன் சார்ஜர்களைச் சேர்ப்பதை நிறுவனம் நிறுத்தியது. சார்ஜரைத் தவிர்ப்பது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் என எந்த ஆதாரமும் இல்லை என்று இந்த வாதங்களை […]
ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்கான ஹார்டுவேர் சந்தா சேவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஐபோன் அல்லது ஐபாட் வாங்குவதை மாதாந்திர அடிப்படையில் ஒரு பயன்பாட்டை வாடகைக்கு எடுப்பது போல் எளிமையாக்கும் ஒரு திட்டம். ஆப்பிள் ஐடி மற்றும் ஆப் ஸ்டோர் கணக்கைப் பயன்படுத்தி வாங்குபவர்கள் பயன்பாடுகளை வாங்கவும் பல்வேறு சேவைகளுக்கு குழுசேரவும் பயன்படுத்துகின்றனர். ஐபோன் அல்லது ஐபாட் சாதனம் வாங்குவது 12 அல்லது 24 மாதத் தவணைகளாகப் பிரிக்கப்படாது. இதற்கு பதிலாக இது மாதாந்திர சேவைக் கட்டணத்தை அடிப்படையாகக் […]
ஆப்பிள்(APPLE) நிறுவனம் தனது சாதனங்களில் ஸ்பைவேரைத் தடுக்கவும், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த அவசர பாதுகாப்பு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு ஐபோன், ஐபாட், மேக் மற்றும் ஆப்பிள் வாட்சையும் பாதிக்கும் பூஜ்ஜிய நாள்( zero-day )பாதிப்புக்கான, பாதுகாப்பு புதுப்பிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிட்டிசன் ஆய்வகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ஒரு குறைபாட்டைக் கண்டறிந்த பிறகு பயனர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு நிறுவனம் வலியுறுத்துகிறது.சிட்டிசன் ஆய்வகம் தனது கண்டுபிடிப்புகளை ஆப்பிள் நிறுவனத்திற்கு செப்டம்பர் 7-ல் தெரிவித்ததாகக் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்க்கிவரும் நிலையில் ஆப்பிள் ஐபோன் விநியோகம் பாதிக்கப்படவில்லை என தற்போது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஐபோன் விநியோகம் சீராக வளர்ச்சியடைந்து இருக்கிறது. மார்ச் மாத நிலவரத்தை ஆய்வு செய்தால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் பற்றிய விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விநியோகம் 17 சதவீதம் அதிகரித்தது இருந்தது. ஐபோன் விநியோகத்திற்கு […]
உலகில் தனது பெயரை கோலோச்சியிருக்கும் ஆப்பிள் நிறுவனம் தற்போது 12.9 இன்ச் அளவில் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் பல்வேறு நோட்புக் மாடல்களை மினி எல்.இ.டி. பேக்லிட் டிஸ்ப்ளேவுடன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளேவுடன் ஆறு சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். இவை 2021 ஆண்டு இறுதியில் 12.9 […]
ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவகாரத்தில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் மற்றும் இந்தியாவில் டெலிகாம் சேவையை ஒழுங்குபடுத்தும் டிராய் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.காரணம் TRAI மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு இடையே எப்பொழுதும் கடுமையான போட்டி நிலவுவதே காரணம். ஆப்பிள் நிறுவனம் ஒருபடி கீழ் இறங்கி, டிராய் உருவாக்கியிருக்கும் செயலியை தனது ஐபோன் மாடல்களில் அனுமதிக்காத பட்சத்தில் ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான அங்கீகாரத்தை ஐபோன்களுக்கு ரத்து செய்யும் […]