கேரள மாநிலம் வயநாட்டில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள்ளது. கேரளாவில் அண்மையில் தான் குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு பரவியது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக தற்போது கேரளாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள்ளதாம். இந்த ஆபிரிக்க பன்றி காய்ச்சல் கேரள மாநிலம் வயநாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பயப்பட வேண்டாம். இது பன்றிகளுக்கு மட்டுமே பரவும். மனிதர்களுக்கு பரவாது என விலங்குகள் நலத்துறை அறிவித்துள்ளது.