ஆப்கான் வீரர்களை வெற்றி கோப்பையுடன் போஸ் கொடுக்க அழைத்த கேப்டன் ரஹானே..!
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு, டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி கடந்த ஆண்டு அங்கிகாரம் அளித்தது. அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில், தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவை எதிர்கொண்டது. பெங்களூருவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் விஜய் 107, தவான் 105, பாண்டியா […]