கோவை ஆனந்தாஸ் உணவாக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை. கோவை ஆனந்தாஸ் உணவாக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வடவள்ளி, காந்திபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொள்கிறது. மேலும் அனந்தாஸ் உணவக உரிமையாளர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.