தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் , விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு வழியாக செலவதற்கு பதிலாக தவறான பாதையில் சென்றது. இதனையடுத்து, ஏர் டிராபிக் கன்ட்ரோல் (ATC) பைலட்டை எச்சரித்த பின்னர் பாதை மாற்றப்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு செல்லும்போது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைப்பில் இடையூறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் வழி தவறியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாதையை திருப்பிய பின் பாதுகாப்பாக அரக்கு […]