இந்தாண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2022 -ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற […]
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதாவது, 7,55,998 மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில்,பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று,10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில்,8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர் என அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி […]
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு. தமிழக சட்டப்பேரவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்டப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் […]