Aadhaar: ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலக்கெடுவானது ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலக்கெடு மார்ச் 14 -ஆம் தேதி வரை மட்டுமே என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (UIDAI) ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது. Read More – ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்! ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாளச் சான்றாகும். […]
ஆதார் அட்டை நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.முன்னதாக, ஹோட்டல்கள்,திரையரங்குகள் உள்ளிட்ட எந்தவொரு உரிமம் பெறாத தனியார் நிறுவனத்துடனும் ஆதார் அட்டை நகலைப் பகிரக்கூடாது என்றும்,அவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.இது தொடர்பாக,மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “பயனர் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே ஒரு நபரின் அடையாளத்தை நிறுவ ஆதாரை பயன்படுத்த முடியும்.மாறாக, ஹோட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் […]
குழந்தை ஆதார் அட்டையான பால் ஆதார் அட்டை 5 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆதார் அட்டை இந்தியாவில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படக் கூடிய அடையாள சான்றாக விளங்குகிறது. புதிதாக சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி வேலை, அரசாங்க சலுகைகள் பெறுவது என அனைத்திற்குமே ஆதார் நிச்சயம் தேவைப்படுகிறது. தற்பொழுது குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு பால் ஆதார் என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை பெற்றோர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இதனை விண்ணப்பிக்க மருத்துவமனையில் குழந்தை பிறந்த சான்றிதழ் போதுமானது. […]
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் ஜலோபுரா பகுதியில் பழைய பேப்பர் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் இம்ரான். இந்நிலையில், இன்று காலை அவரது கடைகு பழைய பேப்பர்களை சிலர் போட்டுச் சென்றனர். சிறிது நேரம் கழித்து அவற்றை அடுக்கி வைக்க எடுத்தார். அந்த பழைய பேப்பர்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் இருப்பதை கண்டு இம்ரான் அதிர்ந்தார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு விரைந்து சென்று […]