இந்த வருடம் ஆடி அமாவாசை வருகிற புதன் கிழமை வரவுள்ளது. வருடாவருடம் இந்நாளில் இந்துக்கள் தங்களது முன்னோர்களை வணங்கும் பொருட்டு, ராமேஸ்வரதிற்கு வந்து வழிபட்டு செல்வர். அங்கு மக்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் 31 ஆம் தேதி காலை 8.30 மணிக்கும் அதே போல ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு அதே நாளில் மலை 4.15 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏரளமானோர் தங்களின் முன்னோர்களுகளை வணங்குவது வழக்கம். இதனையடுத்து இன்று பெரும்பாலனோர் ராமேஷ்வரத்திற்கு திரண்டனர் அங்கு அதிகாலையிலே தங்களின் முன்னோருக்கு சாந்தி பூஜைகளை செய்து வழிபட்டனர் மற்றும் அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி முன்னோர்களை இன்று வழிபட்டால் அவர்களின் ஆசி நம்மை வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்