கேரளாவில் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது மாணவர்களை கேமராவை ஆன் செய்யச் சொல்லி, அவர்கள் ஒவ்வொருவரையும் கடைசியாக ஒரு முறை பார்த்தார். கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அரசு நலன்புரி கீழ்நிலைப் பள்ளியில் 47 வயதான மாதவி என்ற 3 ஆம் வகுப்பு கணித ஆசிரியை உள்ளார். இவர் கடந்த வியாழக்கிழமை தனது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென அசௌகரியம் ஏற்பட்டடு இருமல் தொடங்கியது. […]