ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கு வயது உச்ச வரம்பை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 வயது என்றும் இதர பிரிவினருக்கு 58 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு தளர்த்தப்படும் என்று கடந்த மாதம் சிறுமான்மையினர் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் […]
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரையில், அவர்கள் நியமிக்கப்பட்ட பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதன்பின், அவர் மற்ற இடத்திற்கு பணிமாற்றம் வேண்டி விண்ணப்பிக்கலாம். இந்த நடைமுறை தான் தொடர்ந்து காணப்படுகிது. இந்த நிலையில், வட மாவட்டங்களை பொறுத்தவரையில், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன. இதனையடுத்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களை இங்கு பணியமர்த்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் : நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க […]
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் குறித்து ஓபிஎஸ் அறிக்கை. அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. மேலும், சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில், மாதச்சம்பளம் ரூ.5000 மற்றும் பணிக்காலம் 11 […]
தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்கான பணிகளை நிறுத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளிகளில் 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும், பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி நிர்வாகக்குழுவினர் தாங்கள் விரும்பக்கூடியவர்களை தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. […]
ஊழலுக்கு வழிவகை செய்யும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை கைவிட வேண்டும் என விஜயகாந்த் அறிக்கை. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு […]